இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கோட்டைப் பகுதிகளைப் பாடும் இலக்கியங்கள் வரிசை – 12

படம்
வெள்ளாற்றுச் சருக்கம் – திருப்பெருந்துறைப் புராணம். @அண்டனூர் சுரா சுந்தரலிங்க முனிவர் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம் புதுக்கோட்டை நிலப்பகுதியைப் பாடும் முக்கியமான புராணம் ஆகும். இந்தப் புராணம் மற்றும் இதை இயற்றியவர் குறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன். முந்தைய பதிவின் தொடர்ச்சியாக வெள்ளாற்றை பாடும் வெள்ளாற்றுச் சருக்கம் குறித்து இந்தப் பதிவில் எழுதுகிறேன்.   வெள்ளாற்றுச் சருக்கம்   திருப்பெருந்துறை புராணம் கதையில் 42 ஆவது சருக்கமாக வெள்ளாற்றுச் சருக்கம் பாடப்பட்டுள்ளது. சுவேதகேது என்னும் பாண்டிய மன்னன் நாட்டின் வளங்களைக் காண சுற்றி வருகிறான். இவன் செங்கோன்மையும் சிவநெறியும் கொண்டு வாழ்ந்துவருகிறவன். அப்படியாக வலம் பொழுது சோழ நாட்டு பொன்னி நதியைப் போல ஒரு நதியும் பாண்டிய நாட்டில் இல்லையே என்று கவலை கொள்கிறான். சோழ நாட்டு பொன்னி நதியைப் போல வெள்ளாற்றையும் பெருக்கெடுக்கச் செய்ய விரும்புகிறான். தனது ஆட்சிப் பொறுப்பை அமைச்சனிடம் ஒப்புவித்துத் தான் இமயம் சென்று கடும்தவம் புரிகிறான்.   மன்னின் தவத்தைப் பார்த்த பிரமன் பாண்டியனின் விருப்பதை உணர்ந்து ஒரு தெய்வ நதியை ப...

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -11

படம்
 @அண்டனூர் சுரா  கலிங்கத்துப்பரணி சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான பரணி இலக்கியம், போர்க்களக் காட்சியையும் போரில் வெற்றி பெற்ற வீரரின் சிறப்புகளையும் எடுத்துக் கூறும் தன்மையில் பாடப்பட்ட இலக்கியம். " ஆனை ஆயிரம் அமரிடை வென்ற  மான வனுக்கு வகுப்பது பரணி" எனப் பரணி இலக்கியத்திற்கு இலக்கணம் கூறுகிறது 'இலக்கண விளக்கம்' என்னும் நூல். பரணி நூல்களில் முதன்மையானது கலிங்கத்துப்பரணியாகும்.  இந்த இலக்கியம் செயங்கொண்டார் புலவரால் பாடப்பட்டது. கி.பி 12-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் அவை புலவராக இருந்த செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியைப் பாடியதால் 'பரணிக்கோர் செயங்கொண்டார்' என அழைக்கப்படுகிறார். குலோத்துங்க சோழனின் தளபதி கருணாகரத் தொண்டைமானுக்கும்,  கலிங்க மன்னன்  அனந்தவர்மன்  என்ற மன்னனுக்கும் இடையில் கலிங்கத்தில் நடந்த போர்செய்தியையும் அதில் வெற்றி பெற்ற கருணாகரத் தொண்டைமானின் சிறப்புகளையும் கூறுவதாக இன்னூல் அமைந்துள்ளது. கலிங்கத்துப் பரணி பாடப்பட்டுள்ள முறை கலிங்கத்துப் பரணி கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காடு பாடியது, கோயில் பாடியது, தேவி பாடியது, பேய் ப...

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை – 10

படம்
 @அண்டனூர் சுரா  காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் தமிழ்ப் புலவர்களில் காளமேகப் புலவர் முக்கியமானவர். பாண்டிய நாட்டிலுள்ள திருமோகூர் எனும் ஊரில் அமையப்பெற்றுள்ள பெருமாள் கோவிலுக்கு காளமேகப் பெருமாள் என்று பெயர். இந்தப் பெயரால் இவர் காளமேகப் புலவர் என்று அழைக்கப்பட்டார் என்று ஒரு சாராரும்; கவிதைக் கேட்கும் சடுதியில் காளமேகம் போல கவிதைப் பாடியதால் காளமேகப் புலவர் என்று அழைக்கப்பட்டார் என்று ஒரு சாராரும் பெயர்க்காரணம் தருகிறார்கள்.   காளமேகம் என்பது அவரது இயற்பெயர் என்று ஒரு சிலரும் இதை மறுத்து வரதன் என்பதுதான் இவரது இயற்பெயர் என்றும் சிலரும் வாதம் புரிகிறார்கள். இவர் விழுப்புரம் அருகில் எண்ணாயிரம் எனும் ஊரில் பிறந்ததாகவும், திருக்குடந்தைக்கும் அருகிலுள்ள நந்திக் கிராமத்தில் பிறந்ததாகவும் இருவேறு கருத்து உண்டு. இவர் வைணவம். திருவரங்கம் கோவிலில் மடைப்பள்ளியில் சமையல் தொழில் செய்தவர். இக்கோவிலுக்கும் அருகே திருவானைக்காவில் சம்புகேசுவரராகச் சிவபிரான்  கோவில் கொண்டுள்ளார். அதில் மோகனாங்கி என்ற தாசி இருந்தாள். இவள் நடனத்தில் வல்லவள். இவள்மீது காதல் கொண்டு இவளது வேண்டலின்...

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 09

படம்
@அண்டனூர் சுரா தேவாரம்,  ஏழாம் திருமறை சுந்தரமூர்த்தி நாயனார் என்கிற சுந்தரர் சைவ சமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவர். மேலும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் திகழ்கிறார். இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்து சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார்.  இதன்பிறகு இவர் பல சிவ தலங்களுக்குச் சென்று சிவனைப் பதிகமாகப் பாடியுள்ளார். தம்பிரான் தோழர் என்று அழைக்கப்படுகிறார். அதாவது சிவனுக்குத் தோழனாக இருந்து சேவை செய்தவர்.  இவரது பாடல்கள் 'திருப்பாட்டு' என்றும்  'சுந்தரர் தேவாரம்' என்றும் அழைக்கப்படுகிறது. பதிகம் பாடிய பிறகு சிவனே சுந்தரர் விரும்பும்படியாக பரவையார், சங்கிலியார் என்ற பெண்களை அவருக்குத் திருமணம் செய்துவைத்தார். இவர் பாடிய தேவாரங்கள் ஏழாம் திருமுறையாக சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய மற்றொரு படைப்பான திருத்தொண்டத் தொகை யை வழியொற்றியே சேக்கிழார் பெரியபுராணம் படைத்தார். இவர் திரு...

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -08

படம்
@அண்டனூர் சுரா  தேவாரம், மூன்றாம் திருமறை. சைவத் திருமறை நூல்களில் ஒன்று தேவாரம். தே+ வாரம், தேவ+ ஆரம் என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.  தே என்றால் தெய்வம். வாரம் என்றால் பாடல். வாரம் என்கிற சொல் தெய்வப்பாடல் என்கிற பொருளில் சிலப்பதிகாரம் அரங்கேற்றுக்காதையில் இடம்பெற்றுள்ளது. ' வாரம் இரண்டும் வரிசையிற் பாட ' இதன்படி தெய்வத்தைப் பாடும் பாடல் என்கிற பொருளில் தேவாரத்தைப் புரிந்துகொள்ளலாம். மேலும் தேவ+ஆரம்- தேவாரம்.  ஆரம் என்றால் மாலை என்று பொருள். தேவனுக்கு மாலையாக அனுவிக்கும் பாடல் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். தேவாரத்தில் 274 சிவதலங்கள் பாடப்பட்டுள்ளன. சோழநாட்டுத் தலங்கள் 190, ஈழநாட்டுத் தலங்கள்  2, பாண்டிய நாட்டுத் தலங்கள் 14, மலைநாட்டுத் தலங்கள் 1, கொங்குநாட்டுத் தலங்கள் 7, நடுநாட்டுத் தலங்கள் 22, தொண்டை நாட்டுத் தலங்கள் 32, துளுநாட்டுத் தலங்கள் 1, வடநாட்டுத் தலங்கள் 5. காவிரி கரை தலங்கள் மிக அதிகமாகப் பாடப்பட்டன. இவற்றில் வடகரை தலங்கள் 63, தென்கரை தலங்கள் 127. புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட சிவதலங்களில் பாடப்பட்ட ஒரே  சிவதலம் புனவாயில். ...

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -07

படம்
 @அண்டனூர் சுரா  சிலப்பதிகாரம்,  வஞ்சிக்காண்டம், நடுகல் காதை அகநானூறு, புறநானூறு, மதுரைக் காஞ்சி மூன்றிலும் அழும்பிலன்,  அழும்பில் குறித்து பாடிய அளவிற்கு இல்லாவிட்டாலும் சிலப்பதிகாரத்தில் அழும்பில் பாடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் நடுகல் காதையில் சேரன் செங்குட்டுவனின் கையில் இடம்பெற்றிருக்கும் வேள் அழும்பில் வேளாக இருக்கிறது. கனக விசயரை சிறை வைத்த சேரன் செங்குட்டுவன் அவனது அமைச்சர் வில்லவன் கோதையிடம், "கனக விசயரைச் சிறையிலிருந்து விடுவி. இனி தன் நாட்டாரும் பகை நாட்டாரும் இறைபொருள் செலுத்த வேண்டாம்" என்று தெரிவிக்கிறான். இச்செய்தியை அமைச்சர் வில்லவன் கோதை கையில் அழும்பில் வேள் கொண்டு மூதூர் தோறும் செய்தியாக அறிவித்து திரும்புகிறான். " நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா; வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ? அறை பறை’ என்றே அழும்பில் வேள் உரைப்ப-" இங்கு அழும்பில் வேள் என்பது புறநானூற்று பாடலில் வரும் அழும்பிலன் கையில் வைத்திருக்கும் வேள் என்றும்  அழும்பிலனை வீழ்த்திய பாண்டியனின் வேல் ...

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -06

படம்
 @அண்டனூர் சுரா  மதுரைக்காஞ்சி சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டில்  மிக நீளமான பாடல்களைக் கொண்டது மதுரைக் காஞ்சி. மாங்குடி மருதனார் எனும் புலவரால் இயற்றப்பட்டது. இப்பாடலின் மொத்த அடிகள் 782. மதுரைக் காஞ்சி, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியலை உணர்த்துவதாய் பாடப்பட்டதாகும். இந்நூல் பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் பாடுகின்றது. மேலும் பாண்டிய நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப்பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றி பாடுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மீது மாங்குடி மருதனார்  பாடினார். அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல் மதுரைக்காஞ்சி  345 ஆவது வரியில் அழும்பில் எனும் ஊர் பாடப்பட்டுள்ளது.  மான விறள் வேள்...

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 05

படம்
 @அண்டனூர் சுரா  அகநானூறு        எட்டுத்தொகை நூல்களில் ஒன்று அகநானூறு. அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்கள்  13 அடிகள் முதல் 31 அடிகள் வரை நீண்ட வரிகளான பாடல்களைக் கொண்டிருப்பதால் இதற்கு நெடுந்தொகை என்கிற பெயரும் உண்டு. முதல் 120 பாடல்கள் களிற்றியானை நிரை என்றும் அடுத்த 300 பாடல்கள் மணிமிடைப் பவளம் என்றும் அடுத்த 400 பாடல்க் நித்திலக் கோவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அகநானூறு 44 ஆவது பாடலில் புதுக்கோட்டை கரம்பக்குடிக்கும் அருகிலுள்ள அழும்பில் எனும் ஊர் பாடப்பட்டுள்ளது. இப்பாடலை பாடியவர் குடவாயில் கீரத்தனார் எனும் புலவராவார். முல்லை திணை பாடல் இது. போருக்குச் சென்ற தலைவன் அப்போர் முடிந்ததும் தன் தலைவியின் நினைவு மேலெழத் தன் தேர்ப்பாகனிடம் தேரை விரைந்து செலுத்துமாறு தூண்டுகிறான்.   வந்துவினை முடித்தனன் வேந்தனும் பகைவரும் தந்திறை கொடுத்துத் தமரா யியினரே முரண்செறிந் திருந்த தானை யிரண்டு மொன்றென அறைந்தன பணையே நின்டேர் முன்னியங் கூர்தி பின்னிலை யீயாது வூர்க பாக வொருவினை கழிய நன்ன னேற்றை நறும்பூ ணத்தி த...

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் – 04

படம்
 @அண்டனூர் சுரா புதுக்கோட்டை கரம்பக்குடிக்கும் அருகில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டு பன்றியூர்நாட்டு அழும்பில் என்று குறிப்பிடுகிறது.  இந்த அழும்பில் சங்கப் பாடல்களிலும் பிற்கால கல்வெட்டுகளிலும் இடம்பெற்றுள்ளது. உரையாசிரியர் பொ.வே.சோமச்சுந்தரனார் அவர்கள் புதுக்கோட்டை பகுதியிலுள்ள அம்புக்கோவில் என்று வழங்கப்படும் ஊரே அழும்பில் என்று அவரது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். ஊரும் பேரும் எனும் நூலில் ரா.பி. சேதுப்பிள்ளை  “புதுக்கோட்டை நாட்டிலுள்ள அழும்பில் என்னும் ஊர் அம்புக்கோயில்” என்று குறிப்பிடுகிறார். அழும்பில் குறித்து நான்கு இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதிலொன்று, புறநானூறு. புறநானூறு புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த சங்கப் பாடல்களாகும். இது எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும். இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடிகள் வரையிலான வரிகளைக் கொண்டுள்ளது. புறநானூறு  283 ஆவது பாடல் அழும்பிலன் குறித்து பாடுகிறது. புலவர் அண்டர்நடுங்கல்லினார் எனும் புலவரால் இப்பாடல் பாடப்பட்டது. தும்பைத் திணை வகைப் பாடல் இது. இப்பாடலின் பாட்டுடைத் தலைவன் அழும...

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 03

படம்
@அண்டனூர் சுரா பொன்னியின் செல்வன் , காவிரி மைந்தன் கல்கியின் பொன்னியின் செல்வன், காவிரி மைந்தன் இரு நாவல்களிலும் கொடும்பாளூர் இடம்பெறுகிறது. அருள்மொழிவர்மனின் மனைவியாக வரும் வானதி கொடும்பாளூரைச் சார்ந்தவர். கொடும்பை எனும் கொடும்பாளூர் சங்கக் கால காப்பியம் அதற்குப் பிறகான புராணம் இரண்டிலும் தவிர்க்க முடியாத ஊராக இடம்பெறுகிறது. "அரியும் பொறையும் ஆரிடை மயக்கமும் நிறைநீர் வேலியும் உறைபடக் கடந்தவிந் நெடும்பேர் அத்த நீந்திச் சென்று கொடும்பை நெடுங்குளம் கோட்டகம் புக்கால்" என்கிறது சிலப்பதிகாரம். இன்றைய திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரைக்குச் செல்லும் பாதையில் கொடும்பாளூருக்கும் அருகில் பாறை நிறைந்துள்ள பாதையையும் கானல் நீரும் ஏரியும் ஆக்கிரமிப்புகளையும் மீறி காணக்கிடக்கின்றன. உண்மையில் இப்பாதை தமிழகத்தின் இரு பெருநகரங்களை இணைக்கும் பழைய பாதைகளில் ஒன்றாகும். சிலப்பதிகாரம் காலத்தில் அதாவது பொ.ஆ இரண்டாம் நூற்றாண்டில் பாண்டிய தலைநகர் மதுரைக்கும் சோழர் தலைநகரம் உறையூருக்கும் இடைப்பட்ட ஊராக கொடும்பாளூரும் இவ்விரு நகரங்களை இணைக்கும் பாதையாக இந்த வழித்தடம் இருந்திருக்கிறது. இதையே பெ...