இடுகைகள்

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -18

படம்
நல்லுரைக்கோவை (முதற்பாகம்)- உ.வே.சாமிநாதையர் @அண்டனூர் சுரா  நல்லுரைக்கோவை உ.வே.சாமிநாதய்யரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. நல்லுரைக்கோவையின் முதல் பாகம் (1937) எட்டுக் கட்டுரைகள்; இரண்டாம் பாகம் (1937) பதினான்கு கட்டுரைகள்; மூன்றாம் பாகம் (1938) பதினைந்து கட்டுரைகள்; நான்காம் பாகம் (1939) இருபது கட்டுரைகளும் கொண்டது. இக்கட்டுரைகள் யாவும் கலைமகள், தனவணிகன், ஆடல் பாடல், ஆனந்த விகடன்,  தினமணி, சுதேசமித்ரன்,... போன்ற இதழ்களில் பிரசுரமான கட்டுரைகள். சில கட்டுரைகள் அவராற்றிய சொற்பொழிவுகள். முதற்பாகத்தில் வன்றொண்டர் எனும் தலைப்பில் தனவணிகரான நாராயண செட்டியார் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்  பிறவிலேயே கண் இல்லாதவர்.முகக் கண் இல்லாவிட்டாலும் அகக்கண் வழியே கல்வியாற்றல் நிரம்பப் பெற்றவர். இவர் தேவகோட்டை அண்ணாமலை செட்டியாரின் புதல்வர். இவருடைய முன்னோர்கள் திருப்பெருந்துறை (ஆளுடையார் கோவில்) யில் ஓர் அன்னசத்திரம் கட்டியுள்ளார்கள். அந்தச் சத்திரம் மேற்கு வீதியின் தெற்கு முனையில் கிழக்கு நோக்கியிருக்கிறது. ஆனி மாதத்திலும் மார்கழி மாதத்திலும் அத்தலத்தில் நடைபெறும் திருவிழா...

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 17

படம்
திருவாசகம் - சிவபுராணம்- மாணிக்கவாசகர் @அண்டனூர் சுரா திருவாசகம்  என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். " திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்  " என்பது முதுமொழி. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன. திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு பதிகமும் பத்துப்பத்து பாடல்களைக் கொண்டது. இவற்றில் முதல் பதிகம் சிவபுராணம். மொத்த பதிகங்களில் பதினெட்டு பதிகங்கள் திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்)யில் இயற்றப்பட்டது. அவை, சிவபுராணம், திருச்சதகம், அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப் பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்தபத்து, உயிருண்ணிப்பத்து, திருப்பாண்டிப்பதிகம், திருவேசறவு, உற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா மற்றும் பண்டாய நான்மறை. இந்தத் தொகுப்பிற்கு மாணிக்கவாசகர் சூட்டிய பெயர் சிவபுராணம். சிவ...

புதுக்கோட்டை பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 16

படம்
நால்வர் நான்மணி மாலை  - திருப்பெருந்துறை @அண்டனூர் சுரா நால்வர் மணி மாலை எனும் நூல் துறைமங்கலம் சிவப்பிரகாசர் என்பவரால் இயற்றறப்பட்டது. இவர் 'சிவ அநுபூதி செல்வர்', 'துறைமங்கலம் சிவப்பிரகாசர்', ' நன்னெறி சிவப்பிரகாசர்', 'நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள்' என்று அழைக்கப்படுகிறார். இவர் 17 ஆம் நூற்றாண்டு  காலத்தவர். நால்வர் நான்மணி மாலை என்பது அப்பர், சுந்தரர்,  சம்பந்தர் , மாணிக்கவாசகர் எனும் நால்வரைப் பாடும் நூலாகும். ஒவ்வொருவர் குறித்தும் பத்துப் பாடல்கள் மூலம் நாற்பது பாடல்கள் பாடப்பட்டுள்ளன. நால்வரில் மாணிக்கவாசகர் குறித்த பாடல்களில் பெருந்துறை எனும் திருப்பெருந்துறை எனும் ஊர் மூன்று பாடல்களில் பாடப்பட்டுள்ளது. இவ்வூர் இன்று ஆவுடையார்கோவில் என்று அழைக்கப்படுகிறது. பாடல் -01 பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே வாசகம் அதற்கு வாச்சியம் தூசகல் அல்குல் வேய்த் தோளிடத் தவனே. இந்தப் பாடலில் மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் இறைவனுடைய பேரின்ப அருளில் ஆழ்ந்தவர் என்கிறது. பாடல் -02 வேண்டுநின் அடியார் மெய்யன் பெனக்கும் ...

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -15

படம்
திருமயம் காட்டுபாவாசாகிபு ஆண்டவர் காரணக் கும்மி @அண்டனூர் சுரா கும்மி என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று.  ஆண்கள்,  பெண்கள்,  குழந்தைகள் வட்டமாக நின்று, கைகளைக் கொட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் ஆடும் ஒரு பாரம்பரிய நடனம் மற்றும் பாடல் மரபு ஆகும். இந்த கும்மி ஆட்டத்திற்காகவே எழுதப்பட்ட இலக்கிய வடிவமே கும்மி இலக்கியம் ஆகும். கும்மி இலக்கியத்தில் சிறுத்தொண்டர் நாயனார் கும்மி, அரிச்சந்திர கும்மி முக்கியமானதாகும். திருமயம் காட்டுபாவா சாகிபு ஆண்டவர் காரணக்கும்பி எனும் இந்த இலக்கியம் அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் அவர்களால் இயற்றப்பட்டது. அருள்வாக்கி அப்துல் காதிர்  ( பிறப்பு -  1866 ஆம் ஆண்டு கண்டி – போப்பிட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர்). இஸ்லாமிய ஆன்மீகக் கவிஞர், சந்தத் திருப்புகழ்ப் பாடிய புலவர் என அடையாளம் காணப்பெற்றவர். அருள்வாக்கி  என்பது பதினாறு வயதில் யாழ்ப்பாணத்தில் புலவர்கள் மத்தியில் தனது செய்யுளாற்றலை வெளிப்படுத்தி 'அருள்வாக்கி' எனும் சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர். ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்திற்கு ஒளிபாய்ச்சியவர்களில் ஒருவர். பதங்கள...

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 14

படம்
திருநாட்டுச் சிறப்பு - திருப்பெருந்துறைப் புராணம் - ஆவணம் . திருப்பெருந்துறைப் புராணத்தில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக நாட்டுச்சிறப்பு எனும் சருக்கம் பாடப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் சிறப்பைப் பாடும் சருக்கம் இது. கடலால் சூழப்பட்ட பாண்டிய நாட்டில் மின்னல் இடித்து பெரு மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுகளில் ஓடுகிறது. ஏரி முதலிய நீர்நிலைகளில் வெள்ளம் தேங்குவதால் உழவர்கள் மகிழ்கிறார்கள். மக்கள் புதுநீர்ப் பெருக்கத்திற்குப் பூசனைப் புரிந்து போற்றுகிறார்கள். உழவர் உழுது விதை நெல் பாவி நாற்றுப் பறித்து நடுகிறார்கள். வாலிபர்கள் தத்தம் காதலியுடன் கள்ளுண்டு மகிழ்கிறார்கள். நெற்பயிர் வளர்ந்து தழைக்கிறது. களை பறித்து கதிர் செழிக்கிறது. செந்நெற் கதிர்கள் முற்றி விளங்குகிறது. நெற்கதிர் அறுத்து சூட்டடித்து நெல்லைக் குவித்து பகுக்கிறார்கள்.  இப்படியாக 43 பாடல்களில் நாட்டு வளம் பாடப்படுகிறது. இவற்றில் 29 ஆவது பாடல் பெருமழை பெய்து நீர்நிலை பெருகி விவசாயம் செழித்ததால் மக்கள் மாண்புமிக்க வாழ்க்கை வாழ்ந்ததாக இப்பாடல் பாடுகிறது. " அரிவையர்வாழ்த் தொலியெங்கும் ஆடவன்செய் மணமெங்கும் பரிகரிதேர் ச...

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -13

படம்
திருப்பெருந்துறைப் புராணம் @அண்டனூர் சுரா சமய நெறியில் தனிச்சிறப்பு வாய்ந்த கலைகளில் புராணக்கதைகளும் ஒன்று. இப்புராணக் கதைகளில் ஒரு கூறே தல புராணம்.  புதுக்கோட்டை நிலப்பகுதிக்கு உட்பட்ட தல புராணங்களில் திருப்பெருந்துறை புராணம் முக்கியமானதாகும். இப்புராணத்தை இயற்றியவர் திருவாவடுதுறை ஆதீன மடத்தைச் சார்ந்த சுந்தரலிங்க முனிவர் என்று இந்நூல் பாயிரத்தின் வழியே அறியமுடிகிறது. திருவளரும் பெருந்துறைமான் மியத்தையருஞ்        செந்தமிழாற் றிசைகள் போற்ற அருளுதவு துறைசையின்வாழ் திருச்சிற்றம்         பலகுருவி னடிமை மேலாய் மருவியஞா னப்பொருள்சேர் கல்வியின்றன்       எல்லையுணர் மதுர வாக்கி இருநிலத்தோர்க் கமுதெனச் சுந்தரலிங்க      முனிவரன்றா னியம்பி னானே. இப்பாயிரத்தால் இந்நூலாசிரியர் சுந்தரலிங்க முனிவர் என்று அறியமுடிகிறது. ஓலைச்சுவடியாக இந்தப் புராணத்தை தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் படியெடுத்து நூலாக்கம் செய்திருக்கிறது. தஞ்சைக் கரந்தைப் புலவர் கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் பா...

புதுக்கோட்டைப் பகுதிகளைப் பாடும் இலக்கியங்கள் வரிசை – 12

படம்
வெள்ளாற்றுச் சருக்கம் – திருப்பெருந்துறைப் புராணம். @அண்டனூர் சுரா சுந்தரலிங்க முனிவர் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம் புதுக்கோட்டை நிலப்பகுதியைப் பாடும் முக்கியமான புராணம் ஆகும். இந்தப் புராணம் மற்றும் இதை இயற்றியவர் குறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன். முந்தைய பதிவின் தொடர்ச்சியாக வெள்ளாற்றை பாடும் வெள்ளாற்றுச் சருக்கம் குறித்து இந்தப் பதிவில் எழுதுகிறேன்.   வெள்ளாற்றுச் சருக்கம்   திருப்பெருந்துறை புராணம் கதையில் 42 ஆவது சருக்கமாக வெள்ளாற்றுச் சருக்கம் பாடப்பட்டுள்ளது. சுவேதகேது என்னும் பாண்டிய மன்னன் நாட்டின் வளங்களைக் காண சுற்றி வருகிறான். இவன் செங்கோன்மையும் சிவநெறியும் கொண்டு வாழ்ந்துவருகிறவன். அப்படியாக வலம் பொழுது சோழ நாட்டு பொன்னி நதியைப் போல ஒரு நதியும் பாண்டிய நாட்டில் இல்லையே என்று கவலை கொள்கிறான். சோழ நாட்டு பொன்னி நதியைப் போல வெள்ளாற்றையும் பெருக்கெடுக்கச் செய்ய விரும்புகிறான். தனது ஆட்சிப் பொறுப்பை அமைச்சனிடம் ஒப்புவித்துத் தான் இமயம் சென்று கடும்தவம் புரிகிறான்.   மன்னின் தவத்தைப் பார்த்த பிரமன் பாண்டியனின் விருப்பதை உணர்ந்து ஒரு தெய்வ நதியை ப...