புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 14

திருநாட்டுச் சிறப்பு - திருப்பெருந்துறைப் புராணம் - ஆவணம்.


திருப்பெருந்துறைப் புராணத்தில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக நாட்டுச்சிறப்பு எனும் சருக்கம் பாடப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் சிறப்பைப் பாடும் சருக்கம் இது.

கடலால் சூழப்பட்ட பாண்டிய நாட்டில் மின்னல் இடித்து பெரு மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுகளில் ஓடுகிறது. ஏரி முதலிய நீர்நிலைகளில் வெள்ளம் தேங்குவதால் உழவர்கள் மகிழ்கிறார்கள். மக்கள் புதுநீர்ப் பெருக்கத்திற்குப் பூசனைப் புரிந்து போற்றுகிறார்கள். உழவர் உழுது விதை நெல் பாவி நாற்றுப் பறித்து நடுகிறார்கள். வாலிபர்கள் தத்தம் காதலியுடன் கள்ளுண்டு மகிழ்கிறார்கள். நெற்பயிர் வளர்ந்து தழைக்கிறது. களை பறித்து கதிர் செழிக்கிறது. செந்நெற் கதிர்கள் முற்றி விளங்குகிறது. நெற்கதிர் அறுத்து சூட்டடித்து நெல்லைக் குவித்து பகுக்கிறார்கள். 

இப்படியாக 43 பாடல்களில் நாட்டு வளம் பாடப்படுகிறது. இவற்றில் 29 ஆவது பாடல் பெருமழை பெய்து நீர்நிலை பெருகி விவசாயம் செழித்ததால் மக்கள் மாண்புமிக்க வாழ்க்கை வாழ்ந்ததாக இப்பாடல் பாடுகிறது.

"அரிவையர்வாழ்த் தொலியெங்கும் ஆடவன்செய் மணமெங்கும்
பரிகரிதேர் சிவிகையின்மேற் பவனிவரு பவரெங்கும்
பொருவில்புவி வளமுமலை வளமும்புண ரியின்வளமும்
மருவுமணி நிதிமுதலாம் வளந்திகழா வணமெங்கும்."

இந்தப் பாடலை இவ்வாறு பிரித்து பொருள் அறியலாம்.

"அரிவையர் வாழ்த்தொலி எங்கும் ஆடவன் செய் மணமெங்கும்
பரி கரி தேர் சிவிகையின் மேல் பவனி வருபவர் எங்கும்
பொருவில் புவி வளமும் அலை வளமும் புணரியின் வளமும்
மருவும் அணி நிதி முதலாம் வளந்திகழ் ஆவணம் எங்கும்."

இங்கு ஆவணம் என்பதற்கு கடைவீதி என்று பொருள்.

இந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி, வடகாடு வழியாக பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வடகிழக்கு எல்லை ஊர் இது. 

இப்பாடல் குறிப்பிடும் ஆவணம் இந்த ஊரைக் குறிப்பது அல்ல. ஆவணம் என்றால் கடைவீதி என்பதை விளக்குவதற்காக இந்தப் பாடல் கையாளப்படுகிறது.



கருத்துகள்

  1. ஆவுடையார்கோவிலுடன் ஆவணம் பற்றிய செய்திகள் ஆர்வத்துடன்படிக்கத் தூண்டுகிறது.. பாராட்டுகள். நன்றி. தொடர்க.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை-01

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -06