புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -18

நல்லுரைக்கோவை (முதற்பாகம்)- உ.வே.சாமிநாதையர்

@அண்டனூர் சுரா 


நல்லுரைக்கோவை உ.வே.சாமிநாதய்யரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. நல்லுரைக்கோவையின் முதல் பாகம் (1937) எட்டுக் கட்டுரைகள்; இரண்டாம் பாகம் (1937) பதினான்கு கட்டுரைகள்; மூன்றாம் பாகம் (1938) பதினைந்து கட்டுரைகள்; நான்காம் பாகம் (1939) இருபது கட்டுரைகளும் கொண்டது. இக்கட்டுரைகள் யாவும் கலைமகள், தனவணிகன், ஆடல் பாடல், ஆனந்த விகடன்,  தினமணி, சுதேசமித்ரன்,... போன்ற இதழ்களில் பிரசுரமான கட்டுரைகள். சில கட்டுரைகள் அவராற்றிய சொற்பொழிவுகள்.

முதற்பாகத்தில் வன்றொண்டர் எனும் தலைப்பில் தனவணிகரான நாராயண செட்டியார் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்  பிறவிலேயே கண் இல்லாதவர்.முகக் கண் இல்லாவிட்டாலும் அகக்கண் வழியே கல்வியாற்றல் நிரம்பப் பெற்றவர். இவர் தேவகோட்டை அண்ணாமலை செட்டியாரின் புதல்வர். இவருடைய முன்னோர்கள் திருப்பெருந்துறை (ஆளுடையார் கோவில்) யில் ஓர் அன்னசத்திரம் கட்டியுள்ளார்கள். அந்தச் சத்திரம் மேற்கு வீதியின் தெற்கு முனையில் கிழக்கு நோக்கியிருக்கிறது. ஆனி மாதத்திலும் மார்கழி மாதத்திலும் அத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் வந்தவர்களுக்கெல்லாம் இரவும் பகலும் அன்னமிடுவதும் இராமேசுவர யாத்திரைக்காரர்களும் பிறருக்கும் ஸதாவிருத்தி (அரிசி பருப்பு நெய் முதலிய உணவுப் பண்டங்கள்) கொடுப்பது வழக்கம்.

திருப்பெருந்துறையில் உப்பு மடம், ஊறுகாய் மடம் என்று இரண்டு மடங்கள் இருந்திருக்கின்றன. இவை இரண்டும் சிறு கூரை வீடுகள்.  இத்தலத்து ஊருணியின் மேல்கரையில் அறுபத்து மூவர் மடம் இருந்திருக்கிறது.

வன்றொண்டர் நாராயண செட்டியாரின் ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் திருப்பெருந்துறை ஊரின்  பெயரால் திருப்பெருந்துறைப் புராணம் எனும் தலப்புராணத்தை இயற்றினார் என்பது கூடுதல் செய்தி.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை-01

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 14

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -06