புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 17

திருவாசகம் - சிவபுராணம்- மாணிக்கவாசகர்

@அண்டனூர் சுரா

திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.




"திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் " என்பது முதுமொழி. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.





திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு பதிகமும் பத்துப்பத்து பாடல்களைக் கொண்டது. இவற்றில் முதல் பதிகம் சிவபுராணம்.

மொத்த பதிகங்களில் பதினெட்டு பதிகங்கள் திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்)யில் இயற்றப்பட்டது. அவை,

சிவபுராணம், திருச்சதகம், அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப் பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்தபத்து, உயிருண்ணிப்பத்து, திருப்பாண்டிப்பதிகம், திருவேசறவு, உற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா மற்றும் பண்டாய நான்மறை.

இந்தத் தொகுப்பிற்கு மாணிக்கவாசகர் சூட்டிய பெயர் சிவபுராணம். சிவபுராணம் என்பது சிவபெருமானின் பழமையான பெருமைகளைக் கூறும் பாட்டாகும்.
சிவனின் அனாதியான முறைமையை - பழமையை விரித்துரைக்கும் புராண நூல். பிற்காலத்தில் இந்நூல் திருவாசகம் ஆகியது.

திருவாசகத்தில் முதல் பதிகமான சிவபுராணத்தில் பெருந்துறை பாடப்பட்டுள்ளது.

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! என்று தொடங்கும் சிவபுராணத்தில்


ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

இந்தப் பாடலில்  திருப்பெருந்துறை எனும் ஊர் சீரார் பெருந்துறை என்று பாடப்பட்டுள்ளது.




மற்ற பதிகங்கள் இவ்வூரை எவ்வாறு பாடியுள்ளது என்பது அடுத்தடுத்த பாடல்களில் பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை-01

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை - 14

புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை -06